Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
கிழக்கிலங்கை அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஷரிஆப் பிரிவு மற்றும் அல்குர்ஆன் முழுநேர மனைப் பிரிவுகளில் கற்க விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன.
ஷரிஆப் பிரிவில் கற்க விரும்புவோர் அல்குர்ஆனைத் திருத்தமாகவும் சரளமாகவும் ஓதக்கூடியவராக இருக்கவேண்டும். அத்துடன், 2016ஆம் ஆண்டில்; 09ஆம் தரத்துக்கு சித்தி அடைந்திருப்பதுடன், தேக ஆரோக்கியம், நல்லொழுக்கம் உடையவராகவும் சன்மார்க்கக் கல்வியில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்கவேண்டும்.
எழுத்து மூலப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மேற்கொள்ளப்பட்டு தகுதியான மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர். விசேடமாக ஹாபிழ்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் குறிப்பிடத்தக்கது.
அல்குர்ஆன் முழுநேர மனைப் பிரிவில் கற்க விரும்பும் மாணவர்கள் அல்குர்ஆனைத் திருத்தமாகவும், சரளமாகவும் ஓதக்கூடியவராக இருப்பதுடன், பாடசாலைக் கல்வியில் தரம் 5 – 7 க்கு இடைப்பட்டவராக இருத்தல் அவசியமென்பதுடன், நல்லொழுக்கம், தேக ஆரோக்கியமுடையவராகவும் ஓதுவதற்கு ஆர்வமுடையவராகவும் இருக்கவேண்டும்.
மேற்குறிப்பிட்ட இவ்விரு பிரிவுகளில் கற்கும் மாணவர்களுக்கு மேலதிகக் கற்கைநெறிகளாக, அல் – ஆலிம் (முதவஸ்ஸிதா, ஸானவிய்யா) பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கான ஏற்பாடுகளுடன், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும். இதேவேளை அரபு, தமிழ், ஆங்கிலம், சிங்களம், உருது ஆகிய மொழிகளில் தேர்ச்சியுடன் கணினித்துறையில் டிப்ளோமா, இஸ்லாமியப் பொருளாதார வங்கி முறைமை போன்ற துறைகளில் பயிற்சியும் வழங்கப்படும்.
உள்நாட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெறுவதற்கான வழிகாட்டல்களுடன் தொழில்நுட்ப வழிகாட்டல்களும் வழங்கப்படும். அதேவேளை, ஊடகத்துறை, தலைமைத்துவப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.
இக்கற்கைநெறிகளுக்கான விண்ணப்பப்படிவங்களை அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியில் பெற்றுக்கொள்ளலாம். இந்த விண்ணப்பப்படிவங்களை பூரணப்படுத்தி அதிபர், செயலாளர் கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி, பிரதான வீதி, அட்டாளைச்சேனை – 05. என்ற முகவரிக்கு இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கமுடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025