Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 11 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை பாலமுனை, சின்னப்பாலமுனை ஸஹ்வா ஆண்கள் அறபுக் கல்லூரிக்கு 2016ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டள்ளதாக கல்லூரி அதிபர்; ஏ.ஆர். முகம்மது றமீன் மதனி இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
விண்ணப்பதாரி, புனித அல்குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்திருப்பதுடன், 2016இல் தரம் 9 இற்கும் சித்தியடைந்திருத்தல், சிறந்த உடல் ஆரோக்கியமுடையவராக இருத்தல் வேண்டும்.
அறபுக் கல்லூரியின் முறையான பாடத்திட்டத்திலான ஷரீஆ பாடங்களோடு க.பொ.த. சாதாரண தரம், க.பொ.த. உயர்தரம், அல்ஆலிம் முதவஸ்ஸிதா, அல்ஆலிம் தானவிய்யா, அஹதிய்யா, தர்மாச்சார்ய ஆகிய பரீட்சைகளுக்குத் தோற்றுவதற்கான முழுநேரப் பாடங்களும் சிறந்த ஆசிரியர்களையும் வளவாளர்களையும் கொண்டு போதிக்கப்படும்.
அத்துடன், கணினி பாடநெறியில் தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையினால் வழங்கப்படும் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் பெறுவதற்கான பாடங்களும் போதிக்கப்படும்.
மேற்படி தகைமைகளைப் பூர்த்தி செய்த ஆண்கள் எதிர்வரும டிசம்பர் 5ஆம், 6ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை கல்லூரியில் நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நேர்முகப் பரீட்சையின்போது, பிறப்பச் சான்றிதழ், தரம் 09 இற்கு சித்தியடைந்ததை உறுதிப்படுத்தும் பாடசாலை விடுகைப் பத்திரம் அல்லது பாடசாலை அதிபர் கடிதம், மாணவர் தேர்ச்சி அறிக்கை ஏனைய புலமைச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களும் அல்குர்ஆன் ஓதுதலும் பரீட்சிக்கப்படும்.
விண்ணப்பிக்க விருப்பமுடையவர்கள் மேலதிக தகவல்களுக்கு 0672255049/ 0774272919/ 0758088164 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago