Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிர்வாகத்துக் உட்பட்ட தைகா நகர் கிராமத்தில் உள்ள வீதிகளை புனரமைத்துத் தருமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தருமான ஐ.எல்.எம்.நஸீர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தைகா நகர் கிராமத்திலுள்ள ஆலிம் வீதி, லோயர் வீதி, கோச்சிப்பொட்டி பள்ளி வீதி, சலீம் சென்றர் வீதி, மொகிதீன் வீதி போன்றன குண்டும் குழியுமாகக் காணப்படுவதால் மழை காலங்களில் நீர்தேங்கிக் காணப்படுவதுடன் மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையில் உள்ளது.
இந்த விடயத்தை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நஸீர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கவனத்துக்கு கொண்டு வந்ததுடன் அதனை உடனடியாக புனரமைத்துத் தருமாறும் கோரிக்கை விடுத்தார்.
இவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதேச சபையின் செயலாளர் புலேந்திரன் குறிப்பிட்ட வீதிகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் விரைவில் இப்பாதைகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.
பிரதேச சபை செயலாளருடன் தொழில்நுட்ப உத்தியோகத்தர், உள்ளுராட்சி உதவியாளர் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.நஸீர் ஆகியோரும் குறிப்பிட்ட வீதிகளைப் பார்வையிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago