Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூன் 17 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, சம்மாந்துறைப் பிரதேச வீதிகளில் குப்பைகளை வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல் பியலால், நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
நகரத்தை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்வது ஒவ்வெருவர் மீதும் கடமையாகும்.
சம்மாந்துறை நகரில் அன்றாடம் சேகரிக்கப்படும் குப்பைகள், சம்மாந்துறைப் பிரதேச சபையால் தினமும் அகற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. எனினும், குப்பைகளை அகற்றிய பின்னர் மீண்டும் குறிப்பாக, வீதிகளில் அங்கும் இங்கும் குப்பைகளை வீசுவதால் நகர்; மாசுபட்டு, துர்நாற்றம் வீசும். மக்கள் நோய்களுக்கும் ஆளாகி வருவதாகவும் அவர் கூறினார். மேலும், வியாபார நிலையங்களில் சேரும் குப்பைகளை ஓர் இடத்தில் சேமித்துவைத்து அகற்ற வேண்டும்.
இது தொடர்பாக வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் துண்டுப்பிரசுரங்கள்; மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது நீதிமன்றத்தின்; ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .