2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

வீதிப் புனரமைப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி 2ஆம் குறுக்குத்தெரு மற்றும் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு தமிழ்க் கிராமத்துக்கான வீதிப் புனரமைப்பு வேலைகளை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி நேற்று புதன்கிழமை ஆரம்பித்துவைத்தார்.

மிக நீண்டகாலமாக குன்றும்குழியுமாகக் கிடந்து வந்த இவ்வீதிகளினூடாக பொதுமக்கள் போக்குவரத்துச் செய்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

மேலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் நடவடிக்கையின் பயனாக இறக்காமம் மாணிக்கமடு வீதிப் புனரமைப்பு வேலைத்திட்டமும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் தலா 20 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் மூலம் தார் இட்டு இரு வீதிகளையும் புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.தவம், முன்னாள் இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.ஜபீர் மௌலவி; மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X