Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 27 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
தற்போது நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளை நண்பகல் 12 மணியுடன் மூடும் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாணச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்துக்கு கோரிக்கை விடுத்து சனிக்கிழமை (26) கடிதம் அனுப்பியுள்ளதாக மேற்படி சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை காரணமாக பல பகுதிகளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பல்வேறு வகையான நோய்களும் ஏற்படுவதால் மக்கள் அஞ்சுகின்றனர்' என்றார்.
'மேலும், இந்த வெப்பமான காலநிலையைக் கருத்திற்;கொண்டு பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டிகளை கல்வியமைச்சு எதிர்வரும் மே மாதம்வரை ஒத்திவைத்துள்ளது. இதனை எமது சங்கம் வரவேற்கிறது.
இந்த வெப்பமான காலநிலை காரணமாக மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்பறைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அத்துடன், நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து பாடசாலை நேரங்களில் குடிநீருக்காக மாணவர்கள் கஷ்டப்படுகின்றனர்.
எனவே, மாணவர்கள் எதிர்நோக்கும் இந்த அசௌகரியங்களை கருத்திற்கொண்டு அனைத்துப் பாடசாலைகளையும் நண்பகல் 12 மூடும் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
40 minute ago