2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

விபத்துகளில் அக்கரைப்பற்றில் 11 பேர் மரணம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

2015ஆம் ஆண்டு ஜனவரி முதல்; நவம்பர் மாதம்வரையில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 11 பேர் மரணமடைந்துள்ளதுடன், 103 பேர் காயமடைந்துள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல், இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

மேற்படி காலப்பகுதியில்; அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில்   போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக  அதேயிடத்தில் விதிக்கப்பட்ட தண்டமாக 59 இலட்சத்து 92 ஆயிரத்து 650 ரூபாவும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டமாக 15 இலட்சத்து 75 ஆயிரத்து 150 ரூபாவும் அறவிடப்பட்டுள்ளது. மேலும், இக்காலப்பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக நீதிமன்றத்தில்; 18 ஆயிரத்து 417 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X