Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
அம்பாறை மாவட்டத்தில் விபத்துகளால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் 14 பேருக்கு மருத்துவச் செலவுக்கான காசோலைகள் சர்வோதய நிறுவனத்தால் மாவட்ட செயலகத்தில் வைத்து நேற்றுப் புதன்கிழமை (27) வழங்கப்பட்டன.
இதன்போது, தெரிவு செய்யப்பட்ட மாணவர் ஒவ்வொருவருக்கும்; 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன.
வீதி விபத்துகளை குறைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், சர்வோதய நிறுவனமானது அம்பாறை மாவட்டத்திலுள்ள நாவிதன்வெளி, சம்மாந்துறை, இறக்காமம், உஹண, தமண, பதியத்தலாவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் மருத்துவச் செலவுக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டன. இதுவரையில் மொத்தமாக 34 பேருக்கு இக்கொடுப்பனவு வழங்கப்பட்டன.
எதிர்வரும் மே மாதம்; மேலும் 10 மாணவர்களுக்கு இக்கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சர்வோதய நிறுவனத்தின் கல்முனை அலுவலக முகாமையாளர் எம்.எம்.பாரிஸ் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago