Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஜூன் 25 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
கல்முனை நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (24) காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவரும் போக்குவரத்துப் பொலிஸார் ஒருவரும் காயங்களுக்குள்ளாகி கல்முனை ஆதார வடக்கு வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி தமது கடமைக்கென பொலிஸ் நிலையத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் கல்முனை - மட்டக்களப்பு பிரதான வழியாக சென்று கொண்டிருந்த வேளையில், கல்முனை சர்வோதய அலுவலகத்துக்கு முன்னால் பாடசாலை மாணவர் ஒருவர் பிரதான பாதையை கடக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த பொலிஸ் அதிகாரி செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டுள்ளார்.
இதில் எஸ். ஜெயசாந் (வயது 12) என்ற மாணவரும் எஸ்.எஸ். குமார என்ற போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
இவ் விபத்து தொடர்பாக கல்முனைப் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .