2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 17 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அம்பாறை, அட்டாளைச்சேனை கோணாவத்தை பெரிய பாலத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில்  அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அலியார் லெப்பை மீரா சாகீப் (வயது 74) என்பவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.  

காயமடைந்த இருவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

மீராசாகீப்பின் சைக்கிளுடன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதில் தலையில் படுகாயமடைந்த  மீராசாகீப் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இதன் பின்னர் மீண்டும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் அன்றையதினம் இரவு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திவந்தவரும்  மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து வந்தவரும் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபரை எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.ஏ.ஆர்.ஆக்கீலா உத்தரவிட்டார். காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேக நபரை நேரடியாக வைத்தியசாலைக்கு சென்று   பார்வையிட்ட பின்னரே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X