Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூன் 14 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அம்பாறை, அக்கரைப்பற்று இராமகிருஸ்ண கல்லூரி வீதியில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் இன்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்று 7ஆம் பிரிவைச் சேர்ந்த குடும்பஸ்தரான 60 வயதுடைய மோசஸ் ஜோன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, இவரது சைக்கிளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது படுகாயமடைந்த இவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளதார்.
இந்த விபத்தைத் தொடர்ந்து, குறித்த மோட்டார் சைக்கிள் சாரதியைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .