2025 மே 21, புதன்கிழமை

விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி

Princiya Dixci   / 2016 மார்ச் 01 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.கார்த்திகேசு, வி.சுகிர்தகுமார்  

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி நேருபுரம் பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில், மண்டானை கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய தம்பிமுத்து துஷாந்தன் என்ற குடும்பஸ்தரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பொத்துவில் நோக்கிச் சென்ற டிப்பர், வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இவரை சுமார் 82 மீட்டர் துரம் வரை இழுத்துச் சென்றதில் இவர் உயிரிழந்துள்ளார். 

டிப்பர் சாரதியைக் கைதுசெய்துள்ள திருக்கோவில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .