2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

பாலமுனை திராய்க்கேணி கிராமத்தில் செலயற்றுப் போயுள்ள விளையாட்டுத் துறையினை ஊக்குவிக்கும் நோக்கில், கிழக்கிலங்கை இந்து சமய விழிப்பணர்வு சபையின் ஏற்பாட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (29) திராய்க்கேணி ஸ்ரீ மாரியம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

மாரியம்மன் ஆலயத்தின் தலைவர் எஸ்.ரி.கார்த்திகேசு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கிலங்கை இந்து சமய விழிப்பணர்வு சபையின் பணிப்பாளர் ஏ.ஜி.ரவிஜி குருக்கள், சபையின் ஆலோசகர் திரு சோமஸ் காந்தா உட்பட ஆலயத்தின் நிருவாகிகள் ஊர்பிரமுகர்கள், விளையாட்டுக் கழகத்தின் அங்கத்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கிலங்கை இந்து சமய விழிப்புணர்வு சபையின் ஏற்பாட்டில் திராய்க்கேணி கிராமத்தில் இயங்கிவரும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடைகளும் வழங்கி வைக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .