2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வெள்ளை வான் கடத்தலை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 மே 05 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன், எஸ்.கார்த்திகேசு, ரீ.கே.றஹ்மத்துல்லா

வெள்ளை வான் கடத்தலை நிறுத்து எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது  இனந்தெரியாத கும்பல் ஒன்று  தாக்குதல் நடத்த முற்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

காணாமல் போனவர்களினுடைய குடும்பங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், அம்பாறை நகரிலுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக இடம்பெற்று, பின்னர் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாகவும் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மாவட்டச் செயலாளரிடம் மகஜரை கையளிக்க இருந்த நிலையில்,  இந்த அச்சுறுத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பதற்றமான நிலைமை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இதன் பின்னர் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.எம்.அமீரிடம் ஆர்ப்பாட்டக்காரார்கள் கையளித்துவிட்டுச்; சென்றனர்.

கடந்த காலத்தில இடம்பெற்ற வெள்ளை வான் கலாசாரம் மீண்டும்; ஆரம்பமாகியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான கடத்தல் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும். சட்ட ரீதியாகவே கைதுகள் இடம்பெற வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X