2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வாள் வெட்டு சம்பவங்கள் இதுவரை 14 பேர் கைது

Kogilavani   / 2016 மே 03 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா .சரவணன்

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் வாள்வெட்டுச் சம்பங்களுடன் தொடர்புடைதாக கூறப்படும் 14 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஐவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வாரம், அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு அருகில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேர் கைதுசெய்யப்பட்டதுடன் இவர்கள்  விளக்கமறியில் வைக்கப்பட்டனர்.

இதேவேளை, இவ் வாள் வெட்டுச் சம்பவத்தின் தொடர் சம்பவமாக கடந்த சனிக்கிழமை ஆலையடிவேம்பு வீரமா காளி கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம் ஜெமிலின்; ஆலோசனைக்கமைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு புலனாய்வு பொறுப்பதிகாரி வை.விஜயராஜ் தலைமையிலான பொலிஸார்   மேற்படி  வாள் வெட்டுச் சம்பவத்துடன்; தொடர்புடைய 6 பேரை திங்கட்கிழமை(2) கைது செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X