Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
உணவு உற்பத்தி தேசிய செயற்றிட்டம் 2016 -2018இன் கீழ் 'நெல் வீட்டுக்கு, வைக்கோல் வயலுக்கு' எனும் தொனிப்பொருளில் வைக்கோலை எரிப்பதற்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி நிந்தவூர் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையம், நிந்தவூர் பிரதேச செயலகம், நிந்தவூர் நலன்புரிச் சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்பேரணி, நிந்தவூர் பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆரம்பமாகி அல்லிமூலைச் சந்திவரை சென்றது.
நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் சிரேஷ்ட கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஐ.எல்.ஏ.ஹார்லிக் இங்கு தெரிவிக்கையில், 'வேளாண்மைச் செய்கையின்போது, வயல் நிலங்களில் வைக்கோலைப் பசளையாகப் பாவிப்பதால், சிறந்த விளைச்சலை விவசாயிகள் பெறமுடியும். விவசாய நிலங்களில் வைக்கோலை எரிக்காமல் விடுவதால், நெற்பயிர்களுக்குத் தேவையான 17 வகையான மூலக்கூறுகள் வைக்கோல் மூலம் கிடைப்பதுடன், இரசாயன உரத்தைக் கொள்வனவு செய்வதற்கான பணமும் விவசாயிகளுக்கு மீதப்படுத்தப்படுகின்றது
இயற்கைப் பசளையாக வைக்கோலைப் பாவிப்பதால், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியுமென்பதுடன், மக்களை தொற்றா நோய்களிலிருந்தும் காப்பாற்றமுடியும்' என்றார்.
மேலும், சிறுபோக நெல் அறுவடையின் பின்னர் வைக்கோலை எரிக்கும் வயல் சொந்தக்காரர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்பதுடன், இவர்களுக்கு எதிர்வரும் பெரும்போகத்தில் நெற்பயிர்ச்செய்கைக்கான உரமானியம் வழங்கப்படாது. இத்தனையும் மீறி வைக்கோலை எரிக்கும் வயல் சொந்தக்காரர்களுக்கு எதிராக ஒரு ஏக்கருக்கு 5,000 ரூபாய் படி அபராதம் அறவிடப்படும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
18 May 2025