2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

வடிகான்கள் துப்புரவு செய்தல்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

தற்போது பெய்கின்ற மழையைத் தொடர்ந்து அட்டாளைச்சேனையில் வடிகான்களை துப்புரவு செய்து வெள்ளநீரை அகற்றும் நடவடிக்கையை அப்பிரதேச சபை முன்னெடுத்துள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள வடிகான்களை துப்புரவு செய்யும் பணிகள் கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக அதன் பணிகள் இடம்பெறும் என்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.எம்.கலீல்  றகுமான் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழ் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், தீகவாபி, திராய்க்கேணி, ஆலம்குளம், தைக்கா நகர், அஸ்ரப் நகர், சம்பு நகர், மீலாத் நகர், ஹிரா நகர்  போன்ற கிராமங்கள் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X