2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வட்டமடுவில் 4 பேர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 05 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்திலுள்ள வட்டமடு மேய்ச்சல்தரைப் பகுதிக்கு அத்துமீறிச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை வனபரிபாலனத் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்ட இந்த நான்கு பேரும் திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வட்டமடு மேய்ச்சல்தரை பிரதேசம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில்; இடம்பெற்று வருகின்ற நிலையில், குறிப்பிட்ட அப்பிரதேசத்தில் வயல் செய்கையில் ஈடுபடுவதற்கான தடை உத்தரவு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X