Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Gavitha / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹூஸைன்
அம்பாறை மாவட்டத்தில் சனிக்கிழமை (23) இடம்பெற்ற தேசிய காங்கிரஸின் 125ஆவது பேராளர் மாநாட்டின் போது, புதிய அரசியல் சாசனத்தில் வடக்கு-கிழக்கு இணைப்புக்கு தேசிய காங்கிரஸ் தனது எதிர்ப்பை வெளிக்காட்டியதுடன், இந்த இணைப்புக்கு எதிரான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அக்கரைப்பற்று, அதாவுல்லா மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு, கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ. எல். அதாவுல்லாஹ் தலைமை தாங்கியிருந்தார்.
வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள அந்த தீர்மானம்,
'கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்துடன் இணைக்கப்படக் கூடாது. ஏதாவதொரு ஒரு சந்தர்ப்பத்தில் இரு மாகாணங்களும் இணைக்கப்படுமானால், சம அந்தஸ்துடையதாக, தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணமும் அதேபோன்று, முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணமும் அமையக் கூடியதாக மாகாண எல்லைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் குறித்து, ஊடகவியலாளர்களிம் கருத்து தெரிவித்த தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரான எம். எஸ். உதுமாலெப்பை,
'வடக்கு - கிழக்கு இணைந்த மாகாண சபை முறைமையினால் முஸ்லிம்கள் பாதகமான விளைவுகளையே எதிர்கொண்டனர். முஸ்லிம்களும் தமிழர்களைப் போன்று தனித்துவமான தேசிய இனம் என்பதை மறந்து, தமிழ் அரசியல் தலைமைகள் நடந்து கொள்வதாகவும் கூறிய அவர், அதிகாரப் பகிர்வில் தமிழர் தரப்பு முஸ்லிம்கள் தொடர்பாக தனித்து தீர்மானங்களை எடுப்பது ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல' என்று கூறினார்.
'வட மாகாண சபையினால் வடக்கு - கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இணைந்த வடக்கு - கிழக்கு மாகாண சபையில் தமிழ் மொழி மாகாண சபையொன்றும் முஸ்லிம்களுக்கும் மலையக மக்களுக்கும் தனித் தனி அலகு என்ற அந்த தீர்மானம் ஒரு தலைப்பட்சமான தீர்மானம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago