Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அரசியலமைப்புச் சீர்திருத்த முன்மொழிவுகளுக்கு வடக்கு, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தரப்பில் அதிகாரப்பரவலாக்கம், அதிகார அலகு தொடர்பில் ஆலோசனைகளை முன்வைப்பதற்கு 'வடக்கு, கிழக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம்' உருவாக்கப்பட வேண்டுமென வடக்கு, கிழக்கு முஸ்லிம் தேசியவாதிகள் முன்னணியின் தலைவர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் புதன்கிழமை (17) இரவு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'வட, கிழக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் ஒரு புதிய விடயமல்ல. நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில்; இவ்வாறான அமைப்பை உருவாக்கிச் செயற்பட்டது வரலாறு ஆகும். இன்று அதன் தேவை உணரப்படுகிறது. வடக்கு, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளை உணர்ந்து தீர்வைத் தேடிச் செயற்பட வடக்கு, கிழக்கைத் தாயமாகக் கொண்டவர்களாலேயே அதிகம் சாத்தியமாகும்' என்றார்.
'கிழக்கு மாகாணத்தின்; மூன்று மாவட்டங்களிலுமுள்ள மும்மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வட -கிழக்கின் தனித்த முஸ்லிம் உறுப்பினரான அமைச்சர் ரிஷாட்; பதியுதீனும்; சேர்ந்;து பல கட்சிகளையும் 10 சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பில் கட்சி பேதம் களைந்து செயற்பட்டு பிரகாசமான எதிர்காலத்தை அவர்களுக்கு உருவாக்கித் தரவேண்டிய பொறுப்பு இந்த 10 உறுப்பினர்களுக்கும் உள்ளது. வடக்கு, கிழக்கு முஸ்லிம் நாடாளுமன்ற ஒன்றியத்துக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமை தாங்கி நடத்தத் தகுதியுடையவர். எனவே, வடக்கு, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுக்காக அர்ப்பணிப்புடன் ஒன்றித்து உழைப்பதற்கு வடக்கு, கிழக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தை அமைத்துச் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
31 minute ago
57 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
57 minute ago
5 hours ago