Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
முஸ்லிம் மக்களுக்கு நிர்வாக அலகொன்றை வழங்கிவிட்டு, வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்க வேண்டுமென்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறுவதை உலமாக்
கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற கூட்டத்தின்போதே மேற்படி கருத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் கூறுவதை எம்மால்; ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் வடமாகாணசபையின் முதலமைச்சரே தவிர, கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் அல்லவென்பதை முதலில் விளங்கிக்கொள்ளவேண்டும். ஆகவே, அவர் வடமாகாணத்தின்; அபிவிருத்தி மற்றும் அம்மாகாணம் தொடர்பான விடயங்களைப் பற்றிக் கூறவேண்டுமே தவிர, கிழக்கு மாகாணத்தை இணைக்கும் பேச்சைத் தொடர்வதை அவர் நிறுத்த வேண்டும்' என்றார்.
'முஸ்லிம்களுக்கு இணைந்த வடக்கு, கிழக்கில் ஒரு நிர்வாக அலகுவென்பது மிட்டாய் வழங்கி கண்களைப் பறிக்கும் முயற்சியே தவிர, வேறெதுவும் இல்லையென்பதை நாம் அறிவோம்.
கிழக்கு மாகாண மக்கள் இணைந்த வடக்கு, கிழக்கில் அனுபவித்த இன்னல்களையும் அடிமைத்தனத்தையும் இன்னும் மறக்கவில்லை. கிழக்கு மாகாணத்தைப் பற்றிப் பேசுவதை விட்டுவிடுமாறு அவரிடம் நாம் கோருகிறோம்.
மேலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்து இவ்வாறு கூறினால், அவருக்கு எதிராக உலமாக் கட்சி ஆர்ப்பாட்டங்களை ஊக்குவிக்க நேரிடுமென்று எச்சரிக்கிறோம்' எனவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
37 minute ago
2 hours ago