Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜனவரி 23 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா
வடமாகாண முஸ்லிம் மக்களின் மீற்குடியேற்றத்தை நிறைவு செய்வதற்கான அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, கிழக்கு மாகாண சபையைக் கோரும் தனிநபர் பிரேரணையை எதிர்வரும் கிழக்கு மாகாண சபை அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, இன்று(23) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 25 வருடங்களுக்கு முன் வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, பாதிக்கப்பட்டுள்ள வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகள் இனவாதக் கருத்துக்களினால் தாமதப்படுத்தப்படும் பல செயற்பாடுகள், நடவடிக்கைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
எனவே, யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு பல இன்னல்களை கடந்த 25 வருட காலமாக அனுபவித்து வரும் வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை அவசரமாக நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை ஏகமானதாக கோரிக்கை விடுக்க வேண்டும்.
இதற்காக கிழக்கு மாகாண சபையைக் கோரும் தனி நபர் பிரேரணையை எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
26 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
3 hours ago