2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வனவழிப்பாதை நாளை திறப்பு

Princiya Dixci   / 2016 ஜூன் 26 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன்

கதிர்காமத்துக்கான பாதயாத்திரைக்கான வனவழிப்பாதை நாளை, திங்கட்கிழமை (27) அதிகாலை 5.30 மணியளவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் திறந்து விடப்படவுள்ளது. 

இப்பாதையினூடாக 1500க்கும் மேற்பட்ட பக்தர் அடியார்கள்  பயணிக்கவுள்ளனர். இவ்வனப் பகுதியானது குமண (கூமுனை) வனவழிப்பாதை, உகந்தை முருகன் ஆலயத்தில் நடைபெறும் விசேட பூஜைகள் மக்கள் கலந்துகொண்டதன் பின்னரே பக்தர்கள் வனப் பகுதியினுள் பிரவேசிப்பார்கள்.  

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் லகுகல, ஆலையடி வேம்பு திருக்கோவில் பிரதேச செயலாளர், பொலிஸ் மற்றும் படைத்தரப்பு அதிகாரிகள் ஆகியோர் பௌத்த, இந்து குருமார்கள் ஆலய வண்ணக்கர் செயலாளர்கள் நிர்வாக உத்தியோகத்தர்களும் சமுகமளிக்கவுள்ளனர்.

கதிர்காம ஆடிவேல் உற்சவ கொடியேற்ற நிகழ்வும் நடைபெறும்.  இக்குழுவினர், கதிர்காமக் கொடியேற்றம் எதிர்வரும் 03ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் பக்தர்கள் அவ்விடத்தினை சென்றவடைவதாக எதிர்பார்க்கப்படுகின்றனர். கதிர்காம பாதயாத்திரையானது  சுமார் 20- 35 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இருந்து நம் முன்னவர்களினால் பின்பற்றப்பட்டு வருகின்ற செயற்பாடாக உள்ளது. 

பாதயாத்திரையாக வரும் அடியவர்கள் ஆலய சூழலிலேயே தங்கியிருந்து ஓய்வெடுப்பதற்கும், அவர்களுக்கான குடிநீர், பாதுகாப்பு, சுகாதாரம், மின்சாரம், மின்விளக்கு, மருத்துவம் உட்பட பல போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளதாக உகந்தை முருகன் ஆலய வண்ணக்கர் ஜெ.டி.எம்.சூதுநிலமே தெரிவித்தார்.

காட்டுவழியாக பாதயாத்திரையினை மேற்கொள்ளும் அடியார்களின் குடிநீர் தேவையினை நிறைவேற்றுவதற்கு, நீர்வழங்கல் அதிகாரசபை, லகுகலை, பாணமை, திருக்கோவில் பிரதேசசபைகள், மாவட்டச் செயலகம் என்பன சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X