2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வயோதிபப் பெண் கொலை: நகைகள் அபகரிப்பு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எல்.எம்.ஷினாஸ்,எஸ்.சபேசன்

அம்பாறை, பெரியநீலாவணைப் பிரதேசத்தில்; கடத்தப்பட்டு காணாமல் போன சீனித்தம்பி பாத்தும்மா (வயது 73) என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை (10) மாலை காணாமல் போன இவர் தொடர்பில் கல்முனைப் பொலிஸில் உறவினர்கள் முறைப்பாடு செய்ததுடன், அவரையும் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், பெரியநீலாவணை விஷ்னு கோவில் வீதியின் 4ஆவது குறுக்கு ஒழுங்கையிலிருந்து இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், இவர் அணிந்திருந்த தோடு, தங்கச்சங்கிலி, மோதிரம் என்பவை அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எம்.கே.பேரின்பராஜா, சடலத்தைப் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோனைக்காக சடலத்தை கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X