2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

வயல்வெளிகள் வெள்ளத்தில்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ், எஸ்.எம்.எம்.றம்ஸான்

அம்பாறை மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (23) முதல் ஞாயிற்றுக்கிழமை (25) வரை தொடர்ந்து மழை பெய்வதினால், பெரும்போகச் செய்கைக்கான நெல் விதைப்பு நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை, அட்டாளைச்சேனை மற்றும் ஒலுவில் பிரதேசங்களில் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால்  விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தாம் நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள்  தெரிவிக்கின்றனர்.  

இவ்வாறிருக்க, சொறிக்கல்முனை வழுக்கமடு வீதியின் மேலாக வெள்ளம் பாய்ந்து வருவதால் இவ்வீதியூடாக போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் சம்மாந்துறை நகரையும் இணைக்கும் இவ்வீதியூடாக சொறிக்கல்முனை, 6ஆம் கொலணி, சவளக்கடை, ஏத்தாளைக்குள, வீரச்சோலை போன்ற பிரதேச மக்கள் கஷ்டங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X