2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வறுமையில் அம்பாறைக்கு அதிர்ஷ்டம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், அம்பாறை மாவட்டத்தில் வறுமை கணிசமானளவு குறைக்கப்பட்டுள்ளது.  வறுமை குறைந்துள்ள மாவட்டங்களில் அம்பாறை மாவட்டமும் ஒன்றாகுமென அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.

இருந்தபோதிலும், வறுமை ஒழிப்பு நிவாரணத்திட்டம் ஒழுங்கமைக்கப்பட்ட சீரான முறையில் அமையாமை கவலை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

வாழ்வின் எழுச்சி (திவிநெகும) அபிவிருத்தித் திணைக்களத்தின் 'எதிர்கால பயணப்பாதை' எனும் இரண்டு நாள் பயிற்சிக் கருத்தரங்கு, அட்டாளைச்சேனை பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் சமூதாய அடிப்படை அமைப்புகளின் தலைவர்களுக்கு பிரதேச செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், '1995ஆம் 1996 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் 28.8 சதவீதமாகக் காணப்பட்ட வறுமை,  2012ஆம் 2013ஆம் ஆண்டுகளில் 6.7 சதவீதமாகக் குறைந்துள்ளiமை பாராட்டுக்குரிய விடயமாகும். இந்த வறுமைக் குறைப்பு வீதம் சமூர்த்தி திட்டத்தினூடாக மட்டும் ஏற்படுத்தப்பட்டதெனக் கருத முடியாது. இந்நிலையில், வறுமையில் 10.4 சதவீதமாகக் காணப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் தற்போது வறுமை 5.2 சதவீதமாக குறைக்கப்பட்டு, இம்மாவட்டம் வறுமையென்ற வட்டத்தின் எல்லைக்கு அப்பால் செல்வதற்கான நிலைமை தோன்றியுள்ளது' என்றார்.

'தற்போது வாழ்வின் எழுச்சி மூலம் நன்மையடையும் குடும்பங்களை ஆய்வு செய்து தகவல்களைத் திரட்டி முறையாகத் தகுதியானவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை அமைச்சு முன்னெடுத்து வருகின்றமை வரவேற்கத்தக்கது. இச்சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி பொருத்தமான குடும்பங்களுக்கு இந்த நிவாரணம் கிடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கைவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.

'மேலும், யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தம் உள்ளிட்டவை  காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் வறுமையில் ஆகக் கூடுதலாக 28.5 சதவீதமான நிலையில் காணப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டமும் அதற்கு அடுத்த நிலையில் காணப்படுகிறது' எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X