2025 மே 22, வியாழக்கிழமை

வறுமையிலும் புலமை காண்பதே சிறந்த கல்வியாகும்

Sudharshini   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.எம்.ஏ.காதர்

கல்வி கற்பதற்கு வறுமை ஒரு தடையல்ல. வறுமையிலும் புலமை காண்பதே சிறந்த கல்வியாகும். கல்வி கற்றலின் மூலமே நம்மை நாம் உயர்த்திக் கொள்ள முடியும் என கல்முனை பிரதேச செயலகப் பிரிவின்  மருதமுனை, நற்பிட்டிமுனை வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் முகாமையாளர் எம்.எம்.முகம்மட் முபீன் தெரிவித்தார்.

திவிநெகும உதவி பொறும் குடும்பங்களைச் சேர்ந்த  மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி வைக்கும் நிகழ்வு, நேற்று (17) மருதமுனை, நற்பிட்டிமுனை வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றி போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், 'வறுமையைக் காரணம் காட்டி பல மாணவர்கள் இன்று கல்வி கற்பதை விட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு சீரழிகின்றனர். இவ்வாறு இடை விலகுகின்ற மாணவர்களை இனங்கண்டு, அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து அவர்களையும் சமூகத்தில் நல்ல பிரஜைகளாக உருவாக்க தனவந்தர்கள் முன்வரவேண்டும்.

வறுமையின் காரணமாக மாணவர்கள் கல்வியை விட்டுவிடக் கூடாது என்பதற்காகவே,  நாங்கள் திவிநெகும உதவி பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எங்களால் முடிந்த உதவியை வழங்குகின்றோம்.

ஆகவே, வறுமையைக் காரணம் காட்டி பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வியைப் பாழடித்து விடாமல், அவர்களுக்கு நல்ல வழிகாட்ட முன்வர வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X