2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வறுமையில் வாடுபவர்களுக்கு வீடுகள்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 05 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

அம்பாறை, மருதமுனை மேட்டுவட்டைப் பிதேசத்தில் வீட்டு வசதியின்றி வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (04) மாலை நடைபெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில்; இயங்கும் சர்வதேச சார்ஜா நிறுவனத்தின் உதவித் திட்டத்தின் கீழ் இந்த வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.  

மருதமுனை சக்காத் நிதியத்துக்குச்; சொந்தமான 02 ஏக்கர் காணியில் 100 வீடுகளை நிர்மாணிப்பதற்குத்  திட்டமிடப்பட்டுள்ளதுடன், முதற்கட்டமாக 12 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் 06 பேர்ச் காணியில் ஒரு வரவேற்பு அறை, ஒரு சமையல் அறை, ஒரு குளியல் அறை, 02 அறைகளைக் கொண்டதாக இந்த வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X