2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வற்றை குறைக்குமாறு ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு

Kogilavani   / 2016 மே 15 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

'வற் அதிகரிப்பானது அரச ஊழியர்களை வெகுவாகப் பாதிக்கின்றது. முன்பிருந்ததுபோல் 11வீதமாக குறைக்குமாறு அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் யூ.எல்.எம். பைஸர் ஜனாதிபதிக்கு மகஜரை அனுப்பி வைத்துள்ளார்.

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்;கள் சங்கத்தினால் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'அரசாங்கத்தின் செலவை அல்லது முன்னைய அரசாங்கம் பெற்ற கடனை ஈடு செய்;ய வற்வரி அதிகரிக்கப்பட்டதெனவும் இது அத்தியாவசியப் பொருட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படாது எனவும் நிதியமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தும் தற்போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரச ஊழியர்களை இது பாதிக்கின்றது.

நல்லாட்சி அரசாங்கமானது அரச ஊழியர்களின் பலத்த ஆதரவுடனேயே ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கையின்   மகாத்மா காந்தியாகவே நாம் உங்களை பார்க்கிறோம். அகிம்சை வழியில் பல வெற்றிகளை தாங்கள் பெற்று வருகின்றீர்கள். இவ்வாறு இருக்கும்போது கடந்த 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள வற்றானது அரச ஊழியர்களை வெகுவாகப் பாதிக்கின்றது.

தொலைபேசிக்கான கட்டணங்கள் அதிகரிக்காது எனக் கூறப்படினும் தொலைபேசிக் கட்டணங்கள் அதிகரித்துள்ளது. நீர்க் கட்டணமும் அதிகரித்துள்ளது. பேக்கரி உணவுப் பொருட்கள் மற்றும் உணவுப் பண்டங்களின் விலையும் அதிகரித்துள்ளது. இவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அரச ஊழியர்கள் திண்டாடுகின்றனர்.

ஜுலை மாதம் முதல் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறு சங்கிலி போல் தொடர்ந்து சென்றால் இதனால் அரச ஊழியர்களே வெகுவாகப் பாதிக்கப்படுவர்.

எனவே, அரச ஊழியர்கள் மற்றும் நாட்டு மக்களின் நலன் கருதி தாங்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி வற்றை முன்பிருந்தவாறு 11 வீதமாக குறைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X