2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

வீதிகளை புனரமைக்குமாறு பணிப்புரை

Janu   / 2024 ஜனவரி 16 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் சேதமடைந்துள்ள வீதிகளை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்குமாறு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எம்.வீரசிங்கவின் அழைப்பையேற்று திங்கட்கிழமை (15) அம்பாறைக்கு விஜயம் செய்த அமைச்சர் பந்துல குணவர்த்தன,  சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்ப்பாசன குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் சேதமடைந்த வீதிகள், கால்வாய்கள் என்பவற்றை நேரடியாக சென்று பார்வையிட்ள்ளார்.

இதன்போது வெள்ளத்தினால் சேதமடைந்துள்ள வீதிகள், பாலங்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்குமாறும் வீதிகளை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்குமாறும்   பணிப்புரை விடுத்துள்ளார்.

எம்.எஸ்.எம். ஹனீபா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X