R.Tharaniya / 2025 டிசெம்பர் 11 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைப் பலரும் வழங்கிவருகின்றனர். ஒருசிலர் தங்களுடைய விஸ்தீரமான காணியை, பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு இலவசமாக வழங்க முன்வந்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டுவதற்கான காணிகளை தந்துதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு அப்பால் தனித்தனி நபர்களும் தங்களுக்கு இயன்றளவில் உதவிகளைச் செய்துவருகின்றனர்.
எனினும், சிலர் உலருணவு பொருட்களிலும் கொள்ளையடிப்பதாக சமூக வலைத்தளங்களில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே இறந்துபோன கோழிகளை இறைச்சியாக்கி விற்பனைச் செய்தல், வெள்ளத்தில் வீணாகிப்போன அரிசியைக் காயவைத்து விற்பனை செய்த சம்பவங்களும் இடம்பெறாமல் இல்லை.
இதற்கிடையே ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள Re building Sri lankaதிட்டத்திற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் 1893 மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, புதன்கிழமை (10) அன்று தெரிவித்தார்.
‘ரீபில்ட்’ (Re build) என்ற சொல் இரண்டாம் உலகப் போரின் போது சமூகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. அந்தப் போர் கணக்கிட முடியாத அளவு மனித மற்றும் பொருள் வளங்களை அழித்தது. போரின் மூலம் மட்டுமே அடையக்கூடிய வெற்றி இல்லை என்று நம்பிய மேற்கத்திய நாடுகள், இந்த அழிக்கப்பட்ட பௌதீக வளங்களை மீண்டும் கட்டியெழுப்ப “ரீபில்ட்” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மேம்பாட்டு செயல்முறையை நிறுவின.
உண்மையில், “ரீபில்ட்” என்பது பழையதைச் சரிசெய்வது பற்றியது அல்ல. இது ஒரு புதிய பரிமாணத்தில் புதிதாகக் கட்டுவது பற்றியது. தவறாக நடந்த அனைத்தையும் மாற்றுவதற்காகப் புதிதாகக் கட்டுவது பற்றியது. இது ஒரு மனித, ஆன்மீக, கொள்கை, தார்மீக, ஆனால், ஒரு நெறிமுறை மறுகட்டமைப்பு மட்டுமல்ல.
‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட மிகக் கடுமையான சோகம், மறுகட்டமைப்புக்கான விதைகளை நமக்கு வழங்கியுள்ளது. இது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மீண்டும் கட்டியெழுப்பும் செயல்முறையாகும். இது பழையதைச் சரிசெய்வதற்குப் பதிலாகப் புதிதாகக்
கட்டும் செயல்முறையாகும்.
இயற்கை பேரிடர் அபாயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை மீண்டும் கட்டியெழுப்புதல் என்ற கருத்தை அணுக வேண்டும் என்று இந்த நாட்டின் பெரும்பான்மையான சமூகம் மிக நீண்ட காலமாக நம்பி வருகிறது. மோசமான விஷயத்திலிருந்து கூட அதை அணுகுவதற்கான விதையை
‘டிட்வா’ வழங்கியுள்ளது.
இந்த ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை சுத்தம் செய்வதற்கு கூட போதிய வசதிகள் இன்மையால் இருக்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டவேண்டும் என்பதே எமது தாழ்மையான கோரிக்கையாகும்.
இந்த அனர்த்தத்தை பயன்படுத்தி கொள்பவர்களும் ஒன்றுக்கு இரண்டு முறையேனும் சிந்திக்கவேண்டும்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025