2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

அகோர மாரியம்மனின் பாற்குடபவனி...

R.Tharaniya   / 2025 ஜூலை 01 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சம்மாந்துறை கோரக்கோயில் அகோர மாரியம்மன் கோவிலின் வருடாந்த தீ மிதிப்பு சடங்கின் ஓரங்கமான  பாற்குடபவனி செவ்வாய்க்கிழமை (1)  கோலாகலமாக நடைபெற்றது. 

சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி ஆரம்பமாகியது.  ஆலய நிர்வாகிகளான த.அழகு ராஜன் ,எஸ். சசிகுமார் ,உபயகாரர் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ஆகியோர் பிரதான கும்பங்களை தாங்க நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் ஏந்தி வந்தார்கள் .

சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் நடந்து கோரக் கோயில் அகோர மாரியம்மன் ஆலயத்தை சென்றடைந்ததும் அங்கு தலைமைப் பூசகர் மாரி மைந்தன் மு.ஜெகநாதன் ஐயாவின் கிரியைகளோடு பாற்குடம் சொரிதல் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வு பெற்றது.

வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X