2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கதிர்காம ஆலய கொடியேற்றம்...

R.Tharaniya   / 2025 ஜூலை 06 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் இந்து முறைப்படியான கொடியேற்றம் தெய்வானை அம்மன் ஆலயம் மற்றும் சிவன் ஆலயத்தில் கடந்த வியாழக்கிழமை (03) அன்று காலை சிறப்பாக இடம் பெற்றது .

எனினும் கதிர்காமம் கண்டுகொள்ளாத பிரதான நிர்வாகிகள் பங்கேற்காத கொடியேற்றமாக இது இன்று மாறிவிட்டது.

இதற்கென காட்டிலிருந்து தேக்கு மரக் கம்பு வெட்டப்பட்டு தெய்வானை அம்மன் ஆலயத்தில் பூஜிக்கப்பட்டு வைக்கப்பட்டது . அங்கிருந்து வியாழக்கிழமை (03) அன்று காலை முருகன் ஆலயம் உள்ளிட்ட ஏனைய ஆலயங்களை வலம் வந்து தெய்வானை அம்மன் ஆலய கொடித்தம்ப பீடத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டது .

அந்த தேக்குமர தடிக்கு பட்டு மற்றும் மாலைகள் சூட்டப்பட்டு நுனியில் சேவலை ஒத்த சிவப்பு வர்ண கொடி கட்டப்பட்டு சரியாக 845 மணியளவில் சிவாச்சாரியார்களால் கொடிக்கம்பம் நடப்பட்டது.

அச்சமயம் யாழ்ப்பாணம் சன்னதி அடியார்களே சூழ இருந்தார்கள். அதன் பின்பு அனைவரும் சென்று சிவனாலயத்தில் மற்றைய கொடி  நிறுவப்பட்டது. ஆதிகாலம் தொடக்கம் இந்த கொடியேற்ற நிகழ்வு தான் கதிர்காமத்தில் பிரதானமாக நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. 

வி.ரி. சகாதேவராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .