2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கொட்டாஞ்சேனையில் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா

Editorial   / 2025 ஓகஸ்ட் 13 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணா ஆலயத்தில் இம்மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை  ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா வெகு விமர்சையாகவும்,  பக்திபூர்வமாகவும் கொண்டாடப்படும்.

உலகெங்குமுள்ள கிருஷ்ண பக்தர்கள் அன்றைய தினம் காலைமுதல் விரதமிருந்து விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வர்.     

கிருஷ்ண ஜெயந்தி தினமானது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதார தினத்தைக் குறிக்கிறது.

 கிருஷ்ண ஜெயந்தியை அனுஷ்டிப்பதன் மூலம் 7 பிறவிகளில் செய்த பாவங்களிலிருந்து விடுபடுவதாக வேதங்கள் கூறுகின்றன. கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணா ஆலயத்தில் இந்த விழா வருடாந்தம் வெகு விமர்சையாகவும்,  பக்திபூர்வமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்றைய தினம் அதிகாலை 5:30 மணிக்கு மங்கள ஆராத்தியுடன் விழா ஆரம்பமாகும். தொடர்ந்து பூஜை, பஜனை, குழந்தை கிருஷ்ணருக்கு வலம்புரி சங்கினால் விஷேட அபிஷேகம், ஆராதனை மற்றும் குழந்தை கிருஷ்ணரை தொட்டிலில் இட்டு தாலாட்டல் என்பன இடம்பெறும்.

மாலை ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணருக்கு மகா அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து விசேடஆராதனைகளும் நடைபெற்று பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்படும்.

அபிஷேகத்துக்கு தேவையான பால், இளநீர் பழம், பூக்கள் மற்றும் அன்னதானத்திற்கு வேண்டிய பொருட்கள் என்பன ஏற்றுக்கொள்ளப்படும்.

மறுநாள் 17 ஆம் திகதி ஞாயிறு நண்பகல் 12.00 மணிக்கு சர்வதேச கிருஷ்ண பக்தி கழக ஸ்தாபகரும் ஆன்மிகக் குருவுமான அருட்திரு பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் வியாச பூஜை நடைபெறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X