2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

சித்திவிநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

R.Tharaniya   / 2025 நவம்பர் 25 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை கிறேட் வெஸ்டன் லூசா பிரிவு இல 03 மாதிரி கிராமம் சிவ ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா திங்கட்கிழமை (24) அன்று நடைபெற்றது.

ஆலயத்தில் கணபதி பூஜை நான்காம் கால யாக பூஜை மகாபுராண குதி,விசேட தீப ஆராதனை, வேத சோஸ்திரம், இராக தாளம், பஞ்ச புராணம் ஓதுதல் ஆசிர்வாதம் அந்தர்பலி, பகிர் பலி,  பக்தர்களின் அரோகரா கோஷத்துடன்  மங்கள வாத்திய இசை முழங்க  பிரதான கும்ப வீதி பிரதட்ஷணம் கோபுர வாசலில் புஷ்ப அஞ்சலி சிவ ஸ்ரீ சித்தி விநாயகருக்கு மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

ஒளிரும் துளிர் குழுவின் ஏற்பாட்டில்  ஆலய பரிபாலன சபையின் வழிகாட்டலுடன் சிறப்பாக ஆலயம் அமைக்கப்பட்டதோடு கும்பாபிஷேக விழா ஆலய பிரதம குருக்களான  சிவஹீ மகேஸ்வரன்  தேசபந்து குமர குருமணி ஈசான சிவாச்சாரியார் சிவ ஸ்ரீ கணேச திருநீலகண்ட சிவம்  தலைமையில் நடைபெற்றது.

எஸ் சதீஸ்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X