Mayu / 2026 மே 20 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை(21) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்தில் இருந்து திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு இன்று(20) காலை எடுத்துச்செல்லப்பட்டது.

திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் செங்குந்த மரபினரான திருநெல்வேலி கென்னடி வீதியிலுள்ள சண்முகநாதன் கபிலன் வீட்டிலிருந்து கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டு திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு அங்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டது.
நிதர்ஷன் வினோத்

6 hours ago
7 hours ago
20 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
20 May 2026