2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மாமாங்கேஸ்வரர் ஆலய எண்ணெய்காப்பு

R.Tharaniya   / 2025 ஜூன் 29 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அடியார்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (29) அன்று மூன்றாவது தினமாகவும் நடைபெற்றுவருகின்றது.

இராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம்,மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஒருங்கே கொண்ட ஆலயம் என பல்வேறு சிறப்புகளை கொண்ட மட்டக்களப்பு அருள் மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜுன் மாதம் (02)ஆம்  திகதி  நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை (23) அன்று கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை (26) ஆம் திகதி தொடக்கம் அடியார்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது.

தற்போது நடைபெற்று வரும் அடியார்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வானது எதிர்வரும் ஜூன்மாதம் (01) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை06 மணி வரையில் நடைபெறவுள்ளதுடன் இரவு பகலாக பக்தர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் வகையில் ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை காலை ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.முற்பகல் 11.05 தொடக்கம் 11.55 மணி வரையில் உள்ள ஆனி உத்தரமும் அமிர்த சித்தயோகமும் கூடிய கன்னி லக்ன சுப முகூர்த்த வேளையில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

வா.கிருஸ்ணா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .