Mayu / 2026 மே 20 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கடல்தீர்த்தம் எடுத்துவந்து திருக் கல்யாணக்கால் நடலுடன் ஆரம்பமாகவுள்ளது.

ஆலயத்திலிருந்து தர்மகர்த்தாக்கள் கப்புகனார் சகிதம் பக்தர்கள் கடலுக்குச்சென்று தீர்த்தம் எடுத்து வரும்வழியில் கல்யாணக்கால் முறித்து அதனைக்கொணர்ந்து கிரியைகள் செய்து ஆலயத்தில் நடுவார்கள்.

தொடர்ந்து ஏழு நாட்கள் பயபக்தியுடன் சடங்குகள் நடைபெற்று ஜூன் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் சடங்கு நிறைவடையும்.

சடங்குகள் அனைத்தும் ஆலய கப்புகனார் தலைமையில் நடைபெறும். சடங்குநாட்களில் ஊர்சுற்றுக்காவியம் பாடுதலுடன் பச்சைகட்டல் நிகழ்வும் இடம்பெறும்.

ஜூன் 01ஆம் திகதி திங்கட்கிழமை காலையில் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வும் பி.ப.3மணிக்கு பொங்கலுக்கு நெற்குத்தும் வைபவமும் நடைபெறும்.

அதேவேளை ஜூன் 08ஆம் திகதி எட்டாம் சடங்குப்பூஜை இடம்பெறும் எனவும் அன்று பொங்கலிடுபவர்கள் நேர்கடன் கொடுப்பவர்கள் நேரகாலத்துடன் நிறைவுசெய்துவிடவேண்டுமென ஆலய பரிபாலனசபையினர் அறிவித்துள்ளனர்.
வி.ரி.சகாதேவராஜா
6 hours ago
7 hours ago
20 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
20 May 2026