R.Tharaniya / 2025 டிசெம்பர் 11 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ ராம கிருஷ்ண மிஷனின் தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவியாரின் 173 வது ஜெயந்தி தின விழாவியாழக்கிழமை (11) அன்று மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமத்தில் எளிமையாக நடைபெற்றது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமிநீல மாதவானந்தா ஜீமஹராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
மாணவரில்லம் மற்றும் சாரதா சிறுமியர் இல்லம் இரண்டு இடங்களிலும் நடைபெற்றது.
உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி உமாதீஷானந்தா ஜீமஹராஜ்ஜின் குருகுல மாணவர்களும் கலந்துகொண்டார்கள்.
எனினும், வியாழக்கிழமை(11) அன்று ஜெயந்தி நிகழ்வுகள் வழமையான முறையில் நடைபெற்ற போதிலும், நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களின் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அன்னை ஸ்ரீ சாரதா தேவியாரின் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறும் ஊர்வலம் இம்முறை நடைபெறவில்லை.





வி.ரி. சகாதேவராஜா
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025