Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 மார்ச் 12 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூரைச் சேர்ந்தவர் சாகர். 30 வயதான இவர் கணினி பழுது பார்க்கும் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவரிடம் கணினி பழுதுபார்க்க வந்த யுவதியொருவருடன் சாகர் நீண்டகாலமாக நட்புடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சாகர் அப்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
மேலும் சில நேரங்களில் சாகர், அப்பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி பலாத்காரமும் செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்7 மாத கர்ப்பிணி ஆகவே, சாகர் அக்கருவைக் கலைக்குமாறு கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
எனினும் இதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில் ஆத்திரமடைந்த சாகர், அவரை வலுக்கட்டாயமாக பிடித்து மாத்திரை கொடுத்து, கருக்கலைப்பு செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட அப்பெண் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், தலைமறைவாகியுள்ள சாகரைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago