2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அப்பிள் விவகாரம்; 26 லட்சம் ரூபாய் மோசடி

Ilango Bharathy   / 2023 ஜனவரி 27 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சென்னை சூளைமேடைச் சேர்ந்தவர்  ‘நாசர்‘. 47 வயதான இவர் தினமும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து அப்பிள் பழங்களை பெட்டிகளில் இறக்குமதி செய்து, கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் பெங்களூரைச்  சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர், ஜம்மு-காஷ்மீரில் இருந்து  இந்திய மதிப்பில் 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அப்பிள் பழங்களை வாங்கி, நாசரிடம் கொடுத்து அதனை விற்பனை செய்து  தரும்படி கேட்டுள்ளார்.

இந்நிலையில் அவரிடம் இருந்து அப்பிள் பழங்களை வாங்கி விற்பனை செய்த நாசர்,  ராஜ் குமாரிடம்  6 லட்சம் ரூபாயை மாத்திரம் கொடுத்து விட்டு, மீதி  26 லட்சம் ரூபானை திருப்பி கொடுக்காமல் தலை மறைவாகியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ்குமார், இது குறித்து  கோயம்பேடு பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில்  பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிஸார், மாறுவேடத்தில் சுற்றித்திரிந்த நாசரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .