2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’அமர்நாத் யாத்திரை ரத்து’’

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 22 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீநகர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில், இமயமலையில் உள்ள அமர்நாத் குகையில் ஆண்டுதோறும், ஜூன் இறுதியில் இருந்து ஆகஸ்ட் வரை, பனியில் சிவலிங்கம் உருவாகும். இந்த பனிலிங்கத்தை தரிசிக்க, நாடு முழுதும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

 இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த ஆண்டிற்கான யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுனர் மனோஜ்சின்ஹா நேற்று வெளியிட்டார்.

மேலும், பக்தர்கள் வீட்டில் இருந்தபடி தரிசிக்க, அமர்நாத் பனி லிங்கத்துக்கு காலை மற்றும் மாலை வேளையில் நடத்தப்படும் சிறப்பு பூஜைகளை, 'டிவி'யில் ஒளிபரப்பவும் அதிகாரி களுக்கு, அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .