A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் இல்லத்தில் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பெருமை கொண்ட அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுஷ்ரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு புகழஞ்சலியுடன் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில்,
'இந்தியாவில் தோன்றிய அறிவுச் சூரியன்! இந்த நூற்றாண்டின் புதிய புத்தர்!
ஒடுக்கப்பட்டோர் அனைவருக்குமான ஒளிவிளக்கு!
எந்நாளும் எல்லோருக்குமான வழிகாட்டி! அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள் இன்று!
அவர் காட்டிய சமூகநீதிப் பயணத்தில் தடம்மாறாது நடை போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் திருவாரூர் இல்லத்தில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்!
சமூகநீதிச் சுடரை அணையாமல் காப்போம்!' என்று பதிவிட்டுள்ளார்.
26 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
1 hours ago