A.K.M. Ramzy / 2021 ஜூன் 02 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாகர்கோவில்:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயைணப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் அமைந்துள்ளது பகவதி அம்மன் கோவில். இங்கு தமிழகம்,கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து வேண்டி செல்வர்.
ஊரடங்கு அமுலில் இருப்பதால் யாரும் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை. இந்நிலையில் இன்று ( ஜூன்2)காலையில் கோவில் சன்னிதானத்தில் இருந்து பெரும் புகை கிளம்பியது. இதனை பார்த்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்தினர் தீயைணப்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.விரைந்து வந்த தீயைணப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவிலில் தீ பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago