2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அரிய வகையான சருகுமான்

Freelancer   / 2023 ஒக்டோபர் 12 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகிலேயே மிகவும் சிறிய, அரிய வகை உயிரினமாக சருகுமான் கருதப்படுகிறது. இதன் எடை 700 கிராம் முதல் 8 கிலோ கிராம்  அளவில் இருக்கும். மான் இனம் என்றாலும் இதற்கு கொம்புகள் கிடையாது. ஆனால் சிறிய வால் உண்டு. ஆண் சருகுமானுக்கு மட்டும் கோரைப்பற்கள், ஒரு ஜோடி தந்தம் போல நீண்டு காணப்படும்.

இதன் நிறம் பழுப்பாகவும், உடலின் மேற்புறம் மஞ்சள் தூவியது போலவும், அடிப்பகுதி வெண்மையாகவும் இருக்கும். மிகவும் அரிதான இந்த மான் மத்திய பிரதேசம், ஒடிசா, பீகார் மற்றும் இலங்கை நாடுகளில் அடர்ந்த காடுகளில் காணப்படும்.

 இந் நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த மயிலாடி என்ற இடத்தில், பாம்பு பிடி வீரர் யுவராஜ், பாம்பை பிடித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியையொட்டி சாலையோரம் ஒரு விலங்கு ஓடுவதை பார்த்து அதை தூக்கி பார்த்தார். பார்க்க வித்தியாசமாக இருந்ததால் இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து அந்த விலங்கு பற்றி ஆராய்ந்தபோது அது அரிய வகை சருகுமான் என தெரிய வந்தது. இந்த மான் இந்த வனப்பகுதியில் எவ்வாறு வந்தது என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X