Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 12 , பி.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அ.தி.மு.க) கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய இருதரப்பினரும் தாமாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ எதிர்வரும் 25ஆம் திகதி ஆஜராக வேண்டும் என்று இருதரப்பினருக்கும் வருவாய்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.
அ.தி.மு.க கட்சி தலைமை அலுவலகத்திற்கு நேற்று (12) ஒரு பிரிவினர் சென்றபோது, அங்கிருந்த மற்றொரு பிரிவினர் கட்சி தலைமை அலுவலகத்தில் நுழையவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் இருதரப்பினரும் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டு, கற்களையும் எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
பணி செய்யாவிடாமல் பொலிஸாரை தடுத்ததுடன், அவ்வை சண்முகம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் மற்றும் கார்களை சேதப்படுத்தினர்.
இதுதொடர்பாக, 13 பேர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பணி செய்யவிடாமல் தடுத்தபோது அவர்களை கைது செய்த பொலிஸார், நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
மேற்படி தாக்குதல் சம்பவத்தில் ஒரு தரப்பில் 24 நபர்களும், மற்றொரு தரப்பில் 20 நபர்களும் காயமடைந்தனர்.
மேலும் காவல் துறையைச்சேர்ந்த 2 நபர்களும், ஒரு தனி நபர் என மொத்தம் 47 நபர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில் கட்சித் தலைமையக பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்), எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்) தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .