2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

ஆஞ்சநேயர் கோவிலுக்கு நிலத்தை வழங்கிய முஸ்லிம்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 10 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூர் :

பெங்களூர் காடுகோடி பெலதூர் காலனியில் வசித்து வருபவர் எச்.எம்.ஜி.பாஷா வுக்கு (வயது 65) பெங்களூரில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஒசகோட்டே வலகேரபுராவில் பழைய மெட்ராஸ் ரோட்டில் 3 ஏக்கர் நிலம் உள்ளது. இதையொட்டி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல பாதை இல்லாததால் பக்தர்கள் சிரமப்பட்டுச் சென்று வந்தனர்.

மேலும் அந்த கோவிலை புனரமைக்க பக்தர்களும் கோவில் நிர்வாகத்தினரும் முடிவு செய்தனர். இதற்காக பாஷாவிடம், சில பக்தர்கள் நிலம் வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாஷா, ஆஞ்சநேயர் கோவில் அருகிலுள்ள நிலத்தை கோவிலுக்கு தானமாக வழங்க முடிவு செய்தார்.

அதன்படி அவர் ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை வீர ஆஞ்சனேய சாமி கோவில் அறக்கட்டளைக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார். மதத்தை கடந்து ஆஞ்சநேயர் கோவிலுக்கு பாஷா நிலம் வழங்கியதை பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து பாஷா கூறியதாவது:-

இந்துக்கள், முஸ்லிம்கள் என்ற பாகுபாட்டை யாரும் காணக் கூடாது. நாம் அனைவரும் மனிதர்கள். சில அரசியல் தலைவர்கள் சொந்த நலனுக்காக மக்களிடையே சாதி,இனம்,மொழி அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர். தற்போதைய தலைமுறை வகுப்புவாத நடவடிக்கைகளை சிந்தித்து வருகிறது.  

நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவே எனது நிலத்தை ஆஞ்சநேயர் கோவிலுக்கு தானமாக வழங்கியுள்ளேன். புதுப்பிக்கப்பட்ட கோவிலை காண ஆர்வமாக உள்ளேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .