Freelancer / 2023 செப்டெம்பர் 04 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4ம்திகதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அதாவது, ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்கான லாக்ரேஞ்சு புள்ளி இருக்கும் இடத்திற்கு 4 மாத பயணத்திற்கு பின்னரே சென்று சேரும் என்றும் அந்த இடத்தில் இருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை எதிர்வரும் 5ம் திகதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
19 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
43 minute ago