A.K.M. Ramzy / 2020 நவம்பர் 08 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ளது சேதுபுராபரா. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவரது 5 வயது மகன் பிரகால்த் விளையாடிக் கொண்டிருந்த போது கடந்த 4ஆம் திகதி அருகில் இருந்த மூடப்படாத 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆழ்துளை கிணற்றைப் பார்த்துள்ளனர். அதில் சிறுவன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்பு படைக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த இராணுவம் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 3 நாள்களாக இரவு பகலாக இராணுவ வீரர்கள், மாநில மீட்பு குழுவினர் போராடினர். இன்று அதிகாலை 3 மணிக்கு சிறுவனை வெளியே எடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago