A.K.M. Ramzy / 2020 நவம்பர் 11 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் இன்று (நவம்பர் 11) தேசியக் கல்வி நாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், நவீனக் கல்வியின் சிற்பியுமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படுகிறது.
சாதி, மத, இனப் பாகுபாடின்றி அனைவரும் தரமான கல்வி பெற வேண்டும். 14 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர் அபுல் கலாம் ஆசாத்.
இவரது தலைமையின் கீழ் 1951இல் முதன்முதலாக ஐஐடி கல்வி நிறுவனம் காரக்பூரில் தொடங்கப்பட்டது. 1953இல் பல்கலைக்கழக மானியக் குழு ஏஐசிடி தொடங்கப்பட்டது.
இதுதவிர சாகித்ய அகடமி, லலித் கலா அகடமி, சங்கீத் நாடக அகடமி, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை தொடங்கப்பட, அபுல் கலாம் ஆசாத் காரணமாக இருந்தார். 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த உருது எழுத்தாளராகவும் போற்றப்பட்டார்.
கல்வித் துறைக்கு இவரது பங்களிப்பைப் போற்றும் வகையில் இவரது பிறந்த தினம், தேசியக் கல்வி நாளாகக் கடந்த 2008ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
50 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
1 hours ago